-
இடதுகண் துடித்தால் பெண்களுக்கு லாபம்,
ஆண்களுக்கு கேடு என்பதை ராமாயணம்
தெளிவாகக் காட்டுகிறது.
-
ராமனும், சுக்ரீவனும் நட்பு கொண்டனர். அவர்கள்
நட்பு கொண்டதற்கு அடையாளமாக கையைப்
பிடித்தபடியே, புதுமணத் தம்பதிகள் போல அக்னியை
வலம் வந்தனர்.
-
“ராமா! நாம் நண்பர்களாகி விட்டோம். இனிமேல்,
சுகமோ கஷ்டமோ நம் இரண்டு பேருக்கும் உரியது,
என்றான் சுக்ரீவன். ராமனும் அந்த வார்த்தைகளை
அங்கீகரித்தார்.
-
அந்த சமயத்தில், எங்கோ இருந்த மூவருக்கு இடது
கண் துடித்தது. ஒன்று அசோகவனத்தில் இருந்த
சீதை. பெண்களுக்கு இடதுகண் துடித்தால் நன்மை
ஏற்படும். சீதையின் விடுதலைக்கான நேரம் அப்போதே
குறிக்கப்பட்டு விட்டது.
-
வாலி மற்றும் ராவணனுக்கும் இடது கண்கள் துடித்தன.
ஆண்களுக்கு இது கெடுபலனை உண்டாக்கும்.
அவர்களின் அழிவுக்கான நேரமும் அப்போதே உருவாகி
விட்டது.
-
பெண்களுக்கு எந்த ஆண் துரோகம் இழைக்கிறானோ,
அவனுக்கு இடதுகண் துடித்தால், அவனது முடிவுகாலம்
நெருங்கி விட்டது என்று அர்த்தம்.
ஆண்களுக்கு வலதுகண் துடித்தால் நல்லது என்பர்.
–
—————————————-
நன்றி – தினமலர்
கண்கள் துடித்தால் யாருக்கு கேடு?
Aucun commentaire:
Enregistrer un commentaire