mercredi 27 mai 2015

எம்ஆர்ஐ ஸ்கேன் என்றால் என்ன? எந்தெந்த நோய

மேக்னடிக் ரீசோனன்ஸ் இமேஜிங்க் (எம்.ஆர்.ஐ.)
ஸ்கேன் மருத்தவத் துறையில் அல்டிமேட்
இன்வெஸ்டிகேஷன் மற்றும் டயக்னோஸ்டிக்
ஸ்கேனாகப் பயன்படுகிறது.

எக்ஸ்ரே மற்றும் சிடி ஸ்கேன்களால் கண்டுபிடிக்க
முடியாத நோய்களைக் கண்டு பிடிக்கவும், நோய்
பாதிப்பின் அளவை கணக்கிடவும் பெரிதும் பயன்
படுகிறது. துல்லியமாகப் பார்க்கமுடியும்.

எம்ஆர்ஐ ஸ்கேன் எந்தெந்த நோய்களுக்கு அதிகமாக
எடுக்கப்படுகிறது என்றால், முக்கியமாக நரம்பியல்
தொடர்பான நோய்களுக்கு, இரத்தம் உறைதல், பக்க
வாத நோய்களுக்கு, கான்சர் வியாதிகளுக்கு,
மண்டை ஓடு உடைவு, மூளை சிதைவு, முதுகுத்
தண்டில் ஏற்படும் பாதிப்பு மற்றும் உள் காயங்களைக்
கண்டறிய எடுக்கப்படுகிறது.

ஒரு மருத்துவரால் நோயின் பாதிப்பை தெளிவாக
தெரிந்து கொண்டால் மட்டுமே அவரால் அந்த
நோயை குணமாக்க சரியான மருந்தை அளிக்க
முடியும். இன்னும் சிலபல ஆண்டுகளில் எக்ஸ்ரேயே
தேவைப்படாத சூழ்நிலை உருவாகலாம். காரணம்
நோயை துல்லியமாகக் கண்டுபிடிப்பதற்கு
எம்ஆர்ஐ ஸ்கேன் மற்றும் சிடி ஸ்கேன்களே
பயன்படுத்தப்படும்.

அதிகப்பயன்பாடு ஏற்படும்போது விலையும் குறையும்.
மக்கள் மத்தியில் உள்ள ஒருவகை பயமும் விலகும்.
-
------------------------------------------
அனிதா பத்மகுமார்
மங்கையர் மலர்

You Might Find These Useful:


எம்ஆர்ஐ ஸ்கேன் என்றால் என்ன? எந்தெந்த நோ&#2991

Aucun commentaire:

Enregistrer un commentaire