mercredi 27 mai 2015

முன்னோர்களை அடிக்கடி கனவில் காண்பதால் எ&

மனதில் எழும் தீய எண்ணங்களைத் தவிர்ப்பது எப்படி?
மனதில் மகிழ்ச்சி நிலைக்க என்ன செய்ய வேண்டும்?

-
நீங்கள் தீய எண்ணங்கள் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்?
எதிர்மறை எண்ணங்களையா அல்லது ஏதாவது
ஆகிவிடுமோ என்கிற கவலையையா? எது என்று
தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.

எதுவானாலும் இந்த எண்ணங்கள் உங்கள் சந்தோஷத்தை
குலைக்கின்றன என்று தெரிகிறது.

கடந்தகால அனுபவங்களின் பாதிப்பினால் மனதில்
தானாகவே சில எண்ணங்கள் வந்துவிடும். அவற்றை
நாம் வரவழைப்பதில்லை. இவற்றை விலக்குவதற்கு
உங்களுடைய முயற்சி தேவை.

உங்களது எதிர்மறை எண்ணங்களைக் கவனியுங்கள்.
சங்கிலியாகத் தொடர்ந்து அவை உங்களை இழுத்துச்
செல்லும் போது, “போதும் நிறுத்து’ என்று முட்டுக்
கட்டை போட்டாலே அவை நின்று விடும்.

மாற்று எண்ணங்களாக இனிமையான எண்ணங்களைக்
கொண்டுவாருங்கள். உதாரணமாக உங்களுக்குப்
பிடித்தவர்களோடு அனுபவித்த இனிய சம்பவங்கள்,
இறைவழிபாடு அல்லது பிடித்தமான பாடல்கள்
போன்றவற்றை பலவந்தமாக மனதில் திரும்பத் திரும்பக்
கொண்டு வர வேண்டும்.

குறிப்பாக தனிமையில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
மனம் ஒன்றும்படியான ஏதாவது செயலில் ஈடுபடவேண்டும்.
அப்போது இழந்த சந்தோஷம் மீண்டும் கிடைக்கும்.
-
--------------------------------------

– அனிதா பத்மகுமார்

மங்கையர் மலர்



முன்னோர்களை அடிக்கடி கனவில் காண்பதால் எ&

Aucun commentaire:

Enregistrer un commentaire