The Deepavali-bath,popularly known as "Ganga Snaan' which is taken by all people on the fourteenth moon in remembrance of the conquest of Naraka, signifies the bath of Jnana, which is taken after destroying the 'ego ' called Narakasura,
Sage Ramana has composed two verses in Tamil (given below).
The day [of the ego’s destruction] is the auspicious day of the fourteenth moon. Deepavali signifies the great Self-Effulgence which shines after destroying ego], .
Deepavali denotes the shining of Self after the destruction, through enquiry, of the greatest sinner,Naraka [the ego], who took the abode of this filthy body, which is the form of hell, as ‘I’.
We will remain as the victorious Narayana (God), the slayer of Narakasura. This slaying of Narakasura is the significance of Naraka Chaturdasi, and our subsequent shining as Narayana, who is our own real self, is what is symbolised by Deepavali, the festival of the ‘array of lights’.
Our humble Pranams to sage Ramana on this auspicious Deepavali Day.
It is a tradition that during Deepavali there should be smoke out of boiling oil in the house, which is stated to be auspicious. Oil can be heated not necessarily for savouries but to fry simple appalams also.
Frying appalam is easy, but making appalam is not that easy.When I was thinking about how we were making appalams at home making the hall juicy with gossips from meighbouring mamis, I thought of Sage Ramana who has altogether different
perception for the ordinary appalam.
| உளுந்தைப் பொடித்து, பின்னர் பிரண்டை ,சீரகம்,மிளகு,உப்பு,பெருங்காயம் சேர்த்து ,நீர் விட்டு நன்றாகப் பிசைந்து, உலக்கையால் இடித்து, அந்த மாவைப் பலகையில் இட்டுக் குழவியால் உருட்டினால் அப்பளம் தயார்.ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டுத் தீயைப் பற்ற வைத்து அப்பளத்தைப் பொரித்து சுவைக்கலாம். இதில் எங்கே வந்தது ஆன்மிகம் ? 'தேகாத்மபாவம்'' எனும் உளுந்தை 'நான் யார் 'எனும் கேள்வியாகிய கல்லில் , 'ஜீவன்'வேறு 'தேகம்' வேறாக உடைத்து , 'சத்சங்கமாகிய'பிரண்டை ரசம் , 'மன அடக்கம்' எனும் சீரகம் 'புலனடக்கம்' எனும் மிளகு, 'பற்றுக்களை ஒழிக்கும் உப்பு 'மனத்தின் நல்வாசனையாகிய பெருங்காயத்தைச் சேர்த்து, 'நான் நான்'என்ற எண்ணமின்றி, 'உள்முக நாட்டம்'எனும் உறுதியான உலக்கையால் அயராமல் இடித்து , 'சாந்தம்' எனும் குழவியால் 'யாவரும் சமம்'என்ற எண்ணமாகிய பலகையில் இட்ட 'அப்பளம்' எனும் ஆத்மாநுபவத்தை , 'மௌனம்' எனும் பாத்திரத்தில் 'ஞானம்' எனும் 'அக்னியால் 'சுத்தப்ரம்மம்'எனும் நெய்யில் பொரித்து 'அதுவே நான் ' (அஹம் பிரம்மாஸ்மி)என்று உணர்வதுதான் வாழ்க்கையின் தத்துவம். ( Here is a rough translation of the above in English.) 1. Try and make some poppadums. 2. Take the black gram, ego self, 2. Mix it with pirandai juice, 3 In the heart mortal place the dough 4. Put the poppadum in the ghee of Brahman But Ramana didn't stop with appalam. We will see how sage Ramana perceives Deepavali. |
தீபாவளி குறித்த வரலாறு யாவரும் அறிந்த ஒன்று.
நரகாசுரன், நாராயணன், சக்ராயுதம், ஒளி என்பவற்றுக்கு ஸ்ரீ ரமண மகரிஷி தரும் விளக்கம்.
ஸ்ரீ ரமண மகரிஷி தீபாவளி குறித்து இரண்டு வெண்பாக்கள்
இயற்றியுள்ளார்
1.நரகு உடலை நானா நரக உலகாளும்
நரகன் எங்கு என்று உசாய் ஞானத் திகிரியால்
நரகனைக் கொன்றவன் நாரணன் அன்றே
நரக சதுர்த்தி நல் தினம் ஆமே.
பொருள் : நரகன் யார் ?
'துன்ப மயமான உடலே நான் 'என்ற எண்ணமே நரகன்.
நாராயணன் யார் ?
அகந்தையாகிய அசுரன் எங்கே யிருக்கிறான் என்று ஆத்ம விசாரணையால் அறிந்து ,ஆத்ம ஞானமாகிய சக்ராயுதத்தால் நரகனாம் அகந்தையை அழித்த ஞானியே நாராயணனாம் இறைவன்.அகந்தை அழிந்து ஞான ஒளி தோன்றும் நாளே தீபாவளி .
2.நரக உரு ஆம் நடலை உடல
கிரகம் அகம் எனவே கெட்ட -நரகனாம்
மாபாவியை நாடி மாய்த்து தானாய் ஒளிர்தல்
தீபாவளியாம் தெளி
இந்தப் பாடலும் இதே கருத்தை வலியுறுத்துகிறது. ஞான ஸ்நானமே தீபாவளி ஸ்நானம்..ஆத்ம ஞான உதயமாம் ஒளியையே தீபங்களும் மத்தாப்புகளும் உணர்த்துகின்றன.
Happy Gnana Deepavali to all the friends.
Jayasala 42
Yaar antha Narayanan?
Aucun commentaire:
Enregistrer un commentaire