vendredi 24 octobre 2014

சிறு கவிதைகள்

1

மனம் எனும் வானில்

எண்ணங்கள் எனும் மேககூட்டம் கூடி

அதிர்ச்சி எனும் மின்னல் தாக்கி

கண்கள் நீரை பொழிகின்றன

2


அன்று பாற்கடல் கடைந்த பரந்தாமன்

அமுதம் எனும் வெண்ணையை தேவர்களுக்கும்

கழிவு எனும் விஷத்தை அசுரர்களுக்கும்

பகிர்ந்தளித்து இப்புவியை காத்தான்


இன்றும் அவன் பாற்கடல் கடைகிறான்

கிடைப்பதோ விஷம் அமுதம் அல்ல

நாம் கழிவை கொட்டி நீரை மாசுபடுத்தினால்

வேறு என்ன கிடைக்கும் விஷத்தை தவிர






சிறு கவிதைகள்

Aucun commentaire:

Enregistrer un commentaire