vendredi 1 mai 2015

vannaanukku vannaaththi mele aasai;vannaaththikkuk kazhuthai mele aasai

சுபாஷிதரத்னாவளி ,நீதி சதகம் வாக்ய ப்ரதீபம் போன்ற நூகளை இயற்றிய பர்த்ருஹரியின் வாழ்க்கை மிகச் சுவையானது.
பர்த்ருஹரி உஜ்ஜயினி யின் மன்னர்.சிறு வயது முதற்கொண்டே தவசிகள், யோகிகள் முதலானோரை வணங்கி வந்தார்.வாடா மொழியிலும் நல்ல தேர்ச்சி உள்ளவர்.

உஜ்ஜயினியில் வேத ஆகமங்களிலும், மந்திர சாஸ்திரங்களிலும் தேர்ச்சி பெற்ற அந்தணர் ஒருவர் இருந்தார்.அவருடைய தவ வாழ்வை மெச்சிய அம்பிகை,மூப்பு, மரணத்திலிருந்து நிவாரணம் அளிக்கும் ஒரு பழம் ஒன்றை அவருக்கு அளித்தாள் .

அரசன் இதைச் சாப்பிட்டால் நீண்ட காலம் வாழ்ந்து மக்களைக் காப்பாற்றலாம் என்ற எண்ணத்துடன் பழத்தை மன்னனிடம் அளித்தார் அந்தணர்.

மன்னன் அதை உண்ணாமல் ஆசை நாயகி அனங்க சேனையிடம் கொடுத்தார். அவள் தன மனம் கவர்ந்த குதிரைக் காரனிடம் கொடுத்தாள் .குதிரைக்காரன் தாசியிடம் கொடுத்தான்.தாசி அதை இடையனிடம் கொடுத்தாள் .இடையனோ அதை சாணம் பொருக்கும் காதலியிடம் கொடுத்தா,.

அந்த பெண் பழத்தின் மகிமை அறியாமல் கூடை நிறைய இருந்த சாணியின் மேல் வைத்தபடி அரண்மனை வழிய்ழ் நடந்து போய்க் கொண்டிருந்தாள்.அரண்மனை மாடத்தில் நின்றுகொண்டிருந்த மன்னணி கண்களில் இந்த பழம் தென்பட்டது.அந்த பெண்ணை விசாரித்ததும் அந்த பெண் சற்றும் குழம்பாமல் மன்னனிடம் பழத்தைக் கொடுத்து வந்த வழியே திரும்பி விட்டாள் .

பர்த்ருஹரி தன தம்பி விக்ரமாதித்தனிடம் பழத்தைக் கொடுத்துவிட்டுத் துறவறம் மேற்கொண்டார்.

வண்ணானுக்கு வண்ணாத்தி மேலே ஆசை. வண்ணாத்திக்குக் கழுதை மேலே ஆசை என்ற பழமொழி இந்த நிகழ்வுக்குப் பின் வந்ததுதான்.

Jayasala 42

You Might Find These Useful:


vannaanukku vannaaththi mele aasai;vannaaththikkuk kazhuthai mele aasai

Aucun commentaire:

Enregistrer un commentaire