-
—
மல்லிகையில் மலர்ந்தவள்
என் மனதில் நிறைந்தவள்
உடலில் உறைந்தவள்
உயிரில் கலந்தவள்
என்னை உருக வைத்தவள்
மறந்து சென்றுவிட்டாள்
அவள் இன்று
-
உண்மையான நேசம் கொண்டு
உன்னை உண்மையாக நேசித்தவன் நானடி – இன்று
உலகில் வாழ்ந்துகொண்டு இருப்பதும்
உன் மேல் வைத்த நேசத்தோடு தானடி
-
உன் காதலை நீ எடுத்து சென்ற பின்பும்
உடைந்து போன காதலால்
வலி கொண்ட இதயத்தில்
ஒரு துளிகூட குறையவில்லை
உன்னில் உருவான என் காதல்
மனதில் இருப்பவளே
-
மறந்து சென்றிருக்கலாம் நீ என்னை
மறக்கவில்லை நான் உன்னை
மறப்பதென்பது என்றும் என்னில் இல்லை
மரண படுக்கை செல்கையிலும்
மனதார நேசிப்பேன் நான் உன்னை
=
= – உதயா
உண்மையான நேசம்
Aucun commentaire:
Enregistrer un commentaire