mercredi 27 mai 2015

நேரம்

திரி ஏற்றும் போது
பிரகாசிக்கும் விளக்கும்
தரும் ஒளியும்
எண்ணெய் இருக்கும் வரையே

வெளிச்சம் இருக்கும் வரை
திரியின் குறையும் நேரம் தனை
யாரும் அறிவதில்லை

வெளிச்சம் மங்க தொடங்க
இருள் மெதுவாக பரவ தொடங்க
திரியின் ஒளி அடங்கும் வேளையில்

ஏனோ மறந்து விடுகிறது
திரியின் முடிவு விளகேற்றும் பொழுதே
நிச்சயிக்கப்பட்ட ஒன்று என்று !



நேரம்

Aucun commentaire:

Enregistrer un commentaire