lundi 4 mai 2015

வருத்தம் ஏன்?

ஏன் வருந்துகிறாய் கண்ணே நீ?
அது எனைக் கலங்கச் செய்கிறது.
எதற்கும் கலங்காதெப்போதும் நீ
இருந்திடவே உள்ளம் விழைகிறது.

நேற்றைக்கு பூவாய் இருந்ததெல்லாம்
இன்றைக்கு சருகே என அறிவாய்!
நாளைக்கும் இருப்போம் என்பதெல்லாம்
ஒரு கனவே என்பதை நீயுணர்வாய்!

நாம் பிறந்த பொழுதில் தீர்மானம்
செய்யப்பட்டது நம் மறைவும்.
செய்யவும் சொல்லவும் ஏராளம்
இருந்தாலும் சென்றிடுவோம் நாமும்,

நம் வேளை வந்ததும்! அதை மறவாதே!
எவ்வேலையும் தள்ளிப் போடாதே!
பிறர் நினைவில் என்றும் நீங்காதே
இருந்திட, நற்செயல்கள் விலக்காதே!

ஒருவேளை மறுபடி நான் வந்தாலும்,
உனைக் காண்பேனா? அது தெரியாதே!
உன் நினைவில் இருப்பேன் நானென்றும்!
அது போதும்! விடை கொடு என் அன்பே!



வருத்தம் ஏன்?

Aucun commentaire:

Enregistrer un commentaire