dimanche 3 mai 2015

மஞ்சள்

மஞ்சள், என்றும் நீ விரும்பிய நிறம்
செண்பகமாய் மணத்தில் நிறைந்தவள்
மாம்பழ சுவையாய வாக்கினில் இனியவள்
தங்கமாய் மனதில் ஒளிர்ந்தவள்
மஞ்சட்காப்பின் மஞ்சளாய்
குணத்தில் சிறந்தவள்
அக்னியின் மஞ்சளாய் அழகில் ஜொலித்தவள்

நீ விரும்பிய அதே
மஞ்சள் நிற புடவையில்
மாங்காய் வடிவமைப்பில்
நெற்றியின் மஞ்சளோடு
அக்னியில் கலந்தவள்

ஒவ்வொரு அன்னையர் தினத்திற்கும்
ஒரு மஞ்சள் ரோஜா என்றும் பூக்கும்
என் தோட்டத்தில்
உன் வரவை தெரிவிப்பது போல்
இன்றும் பூத்தது ஒரு
மஞ்சள் Tulip
நான் எதிர்பாராமலே !!!

ஓ ! அன்னையர் தினம் மிக அருகில்
ஆனால் நீயோ வெகு தொலைவில் .....
ஒரு மஞ்சள் நட்சத்திரமாய்
என்றும் என் வானில்
மஞ்சள்-photo-4.jpg



மஞ்சள்

Aucun commentaire:

Enregistrer un commentaire