mercredi 27 mai 2015

முதல் வணக்கம் (ஆசிரியத்துறை)

முதல் வணக்கம் (ஆசிரியத்துறை)

பொன்னைக் குவித்தென்ன பொருளைக் குவித்தென்ன
பூமிநிலம் சேர்த்தாலென்ன
பெயர்புகழைச் சேர்த்தென்ன சீரோடும் சிறப்போடும்
பூமிதனில் வாழ்ந்தாலென்ன

இன்னும் இவளைவிட அழகியர் இல்லையெனும்
ஒருவளை மணந்தாலென்ன
இவர்தந்தை என்நோற்றான் எனும்படி பிள்ளையர்
இருந்தும் கூடதான்என்ன

உன்னாயுள் முடிந்ததால் என்னுடன் வாவென்று
அந்தகன் அழைத்திடும்பொழுது
அவனை நம்மிடத்தில் அண்டாது தடுத்திடவும்
ஆயுளை நீட்டித்தரவும்

முன்சொன்ன வற்றுள் எதற்குண்டு அத்திறன்
மடநெஞ்சே நீஎண்ணுவாய்
விடுத்திந்த உலகாசை விநாயகனை எண்ணி
வாழ்க்கையை சீர்படுத்துவாய்

வீயார்

You Might Find These Useful:


முதல் வணக்கம் (ஆசிரியத்துறை)

Aucun commentaire:

Enregistrer un commentaire