இனிய தென்றல் மேனியில் படுகிறது.
மகிழம்பூ வாசம் நாசியை நிறைக்கிறது.
மறு குழந்தைப் பருவத்தில் இரவியும் திளைக்கிறது.
ஏனோ என்னுள்ளும் ஒரு நம்பிக்கை பிறக்கிறது.
அதை மறவாதே!
மகிழம்பூ வாசம் நாசியை நிறைக்கிறது.
மறு குழந்தைப் பருவத்தில் இரவியும் திளைக்கிறது.
ஏனோ என்னுள்ளும் ஒரு நம்பிக்கை பிறக்கிறது.
வருடங்கள் ஏழும், மாதங்கள் மூன்றும்,
விளையாட்டு போலே முடிந்து விட்டன.
வருவதாகச் சொன்ன அன்பே நீ மட்டும்
விளையாடுகிறாய் உந்தன் கண்கள் மின்ன!
எழுந்து, குளித்து, உண்டு, உறங்கி,
என் நிலைக்கு நானே மிக இரங்கி ,
உன் நினைவில் ஆசுவாசம் கொண்டு,
இருக்கின்றேன், பிறரும் என்னைக் கண்டு,
பிச்சி என்கின்றார், புன்னகைக்கின்றேன்!
உன் முகத்தை மீண்டும் ஒரு முறை பார்க்கின்றேன்!
அச்சிட்ட எழுத்தாக, உன் உருவம் என்னுள்,
இருப்பதை அறியாரோ? எனத் திகைக்கின்றேன்!
எத்தனை விரைவாய் வர முடியுமோ,
அத்தனை விரைவாய், வா என்னன்பே!
எத்தனை வருடங்கள் ஆயினும் இங்கே
நானிருப்பதை நீ என்றும் மறவாதே!
அதை மறவாதே!
Aucun commentaire:
Enregistrer un commentaire