என்று நுழைந்தாய் என் நெஞ்சில் நீ
துளி துளியாய் உதிரத்தில் கலந்தாயோ
உறங்கும் போதும் இம்சிக்கிறாய்
விழித்திருக்கும் போதும் ஆக்ரமிக்கிறாய்
மறக்க நினைத்தால் அனலாய் தகிக்கிறாய்
நெருஞ்சி முள்ளை விழுங்கியதை போலே
தொண்டையில் சிக்கி தவிக்க வைக்கிறாய்
உன்னை வெளி கொண்டு வரும் முயற்ச்சியில்
நெஞ்சில் சொல்லொண்ண வலியை தருகிறாய்
எந்த வைத்தியத்திற்கும் கட்டுப்பட மறுக்கிறாய்
இத்தனை காலம் சிரமம் மேற்கொண்டும்
இளைக்காமல் இருந்த இவ்வுடலை
சிறிதேனும் இளைக்க வைத்ததற்காக மட்டும்
நன்றி கடன் பட்டிருக்கிறேன்
நிலையாய் இருந்து நிலைத்து விடாதே
வலியாய் வந்த இருமலே!!!
நெஞ்சில் நீ
Aucun commentaire:
Enregistrer un commentaire