அடுக்கடுக்காய் துன்பம் வந்தாலும்,
சுறுசுறுப்பாய் நாமும் செயல்பட்டால்
அடுத்தடுத்தே வெற்றியும் நமைச் சேரும்!
கடகடவென நம் புகழும் கூடும்!
பொன்னாள்!
சுறுசுறுப்பாய் நாமும் செயல்பட்டால்
அடுத்தடுத்தே வெற்றியும் நமைச் சேரும்!
கடகடவென நம் புகழும் கூடும்!
அதை விடுத்து தளர்ந்தே நாமிருந்தால்,
ஒருநாளும் வென்றிட முடியாது!
முடியும் எனும் முனைப்பில் நாம் முயன்றால்,
முடியாதது எதுவும் கிடையாது!
தோல்வியிலே பாடம் கற்றிடுவோம்!
வெற்றியிலே பணிந்தே உயர்ந்திடுவோம்!
என்றைக்கும் மாறாதிருந்திடுவோம்!
இருந்தால் பிறர் மனதில் நின்றிடுவோம்!
இன்றைக்கே என்றே சொல்லிக் கொண்டு
அன்றைய பணியை நாம் முடித்திட்டால்,
என்றைக்கும் நிலைக்கும் பலனுண்டு!
நம் வாழ்வில் எந்நாளும் பொன்னாள்!
பொன்னாள்!
Aucun commentaire:
Enregistrer un commentaire