lundi 6 avril 2015

அப்படியா சேதி ?!

முகம் கூம்பிக் கிடந்தன

மனம் சோம்பிக் கிடந்தன

தோட்டத்தில் சூர்யகாந்திகள்

எப்போதும் நம்ம ஆளு

சரியாகத் தோன்றி நம்மைக்

கண்டு கண்ணடித்துச்


சிரிப்பாரே இன்று

தாமதம் ஏன் என

தமக்குள் புலம்பித்

தவித்தன


இதோ வந்தேன் பார்

தந்தேன் பார் சிறப்பாக

என் காதல் பார்வையை

என கதிரவனும்

குதித்து உதித்து வந்தனன்


சூர்யா காந்தியை நோக்க

காந்தியும் சூர்யாவை

நோக்கித் திரும்பித்

தாக்க மலர்ந்து சிரித்தன

கேலிச் சிரிப்பு ஒன்று


ஏனிந்த கேலி என

புரியாமல் அவனும்

விழிக்க பூக்கள்

மீண்டும் நகைத்து

இதழ் விரித்துக் கூறின


நாங்கள் இல்லாமல்

உனக்குத் தான் பொழுதே

ஏறாதே

வேறேது நாதி என்றன

காக்க வைத்ததற்குப்

பழியாய்


அதனால் என்ன இதோ

தாமரையிடம் சென்றால்

போயிற்று என் கவலை

என குளம் நோக்கி நடை போட


வாங்கிய சூட்டின் சுவடு

தெரியாமல் மெல்ல மறைத்து

பீடு சிறிதும் குறையாமல்


தாமரையே என்னைக் கண்டதும்

ஏனிந்த வெட்கச் சிவப்பு

என வினவ


இரவு அல்லி என்னிடம்

சொல்லி விட்டுச் சென்றாள்

நீ காந்தியிடம் அடி வாங்கி

சிறிது நேரம் கன்னம் சிவந்து

இருந்ததாக

அப்படியா சேதி ??!!

தாமரையும் சிரித்ததே .....






அப்படியா சேதி ?!

Aucun commentaire:

Enregistrer un commentaire