காதல் என்பது நோய் தானென்று
படித்திருந்தேன் முன்னாளில் நான்.
அதற்கு மருந்தும் அதுவே என்று
உணர்கின்றேன் இப்பொழுதில் தான்!
எப்போதும்!
படித்திருந்தேன் முன்னாளில் நான்.
அதற்கு மருந்தும் அதுவே என்று
உணர்கின்றேன் இப்பொழுதில் தான்!
கிடைப்பதில் இன்பம் பெரிதென்றே
நான் சொன்னது உண்டு இத்தனை நாள்!
தொலைவதின் இன்பம் மிகுதியென்றே
அறிந்து கொண்டேன் சற்று முன்னால் தான்!
காலம் என்பது நாம் உணர்வது தான்
எனும் புதுப் புரிதல் கொண்டதெல்லாம்
காதலில் நானும் விழுந்த பின் தான்.
அதற்குப் பின் தான் மற்றெல்லாம்!
வெல்வதும், தோற்பதும் இதில் இல்லை.
வெட்கமும், துக்கமும் அதற்கில்லை.
விலகாதே உடன் வரும் நிழலாக
ஆவோமெனினும், அதில் தாழ்வில்லை!
நாமே இல்லாமல் போனாலும்,
நம் காதல் இங்கே நின்றிருக்கும்!
நீர் போலே பொங்கியும், உடன் அணைத்தும்,
எப்போதும் அதுவும் இங்கிருக்கும்!
எப்போதும்!
Aucun commentaire:
Enregistrer un commentaire