lundi 6 avril 2015

எது வெற்றி?

விரல் வழி மானும், யானையும், முயலும்,

முதலையும், பிறவும் நிழலுருவாய் காட்டி,

சிறுவர்கள் எங்களுக்கு பெருவியப்பும், கனவும்,

தந்தவர் நிழலும் இன்று மிஞ்சாதது வாட்டி

விழி கனத்து, விரைவில் நீர் திரள்கிறது இன்று.

சிறு வயதில் பெரிதாக வேண்டுமெனும் ஆசை,

வளர்ந்ததும் குழந்தையாக மாட்டோமா என்று

ஏங்குவதும், முடிந்த நாட்களின் மீதோர் இச்சை


தானாக அரும்பி, நமை அதிலேயே ஆழ்த்தி,

ஒரு சிறு வருத்தமும், உடன் இணைப்பாகத் தந்து,

அன்று இருந்தோரை ஒரு கணம் மனதில் ஏற்றி,

மீள்வதையும் நாம் நிச்சயம் ஒரு நாள் கடந்து,


செல்லத் தான் போகிறோம் என்றாலும் என்றும்

நமையும் பிறர் அவ்வண்ணமே எண்ணி

இருப்பாரோ? எனும் அக்கேள்வி மட்டும் எஞ்சும்!

ஒரே ஒருவர் இருப்பினும் அதுவே நம் வெற்றி!






எது வெற்றி?

Aucun commentaire:

Enregistrer un commentaire