vendredi 3 avril 2015

எப்போ வருவார்?

இருள் பிரிந்து செவ்வொளியும் மென்மையாகப் பரவ,

இனியவளும் எழுந்திருந்து பின்வாசல் வந்து

உடனே அதைத் திறக்கச் சொல்லி அடம் செய்ய

அன்னையவள் திறந்திடவும் ஓடியவள் நின்று

மூச்சு வாங்கி, பின்னர் "சத்தம் செய்யாதே!"

என அடிக்குரலில் எச்சரிக்க, அன்னையும் அவ்வாறே,

ஓசையின்றி அருகில் வந்து நின்றிட அப்போதே,

கேட்ட அந்த ஒலி நீண்டு, ஏங்கி, பின் தானே,


முடிந்திடவும், ஒரு மெல்லிய சோகமது படர,

அன்னையவள் அல்லிவிழி, கண்ணீரால் நிறைய,

சின்னவளின் சிறுவிரலும், அவள் முகத்தில் இழைய,

சுண்டியவள் சிறு மூக்கும், குறுகி, பின் விரிய,


குயில் பறந்து போனதையும் தாய் முதலில் உணர,

"எங்கேம்மா?" எனும் கேள்வி, சிறுமுகத்தில் தெரிய,

உதடு பிதுக்கியவள், மகள் சொன்னதிலே விதிர்த்தாள்!

"அதன் அப்பா வந்தாச்சோ?" சொல்லியவள் சென்றாள்!






எப்போ வருவார்?

Aucun commentaire:

Enregistrer un commentaire