dimanche 26 avril 2015

வாழும் வழி!

வழியெங்கும் காணும் சிறுபூக்கள்
பெயர் அறியேன். அவையோ அழகாக
பூத்திருக்கும் குழந்தை மென்விரல்கள்
போலிருந்தவை மாலை சருகாக

மிதிபடும்; அவற்றைக் கண்டவுடன்
மனம் நோகும். என்ன வாழ்க்கை இது?
எனும் கேள்வியும் என்னுள் வந்து விடும்.
இருந்தாலும் இதிலோர் செய்தியது

இருப்பதை அறிந்தே தெளிவு வரும்.
வாழ்வெத்தனை குறுகியதாயினுமே,
சிறப்புற அதை வாழ்ந்திட வேண்டும்
அதை விடுத்து நாமும் அனுதினமே

குறை கூறிடின் ஒன்றும் நிகழாது.
நம் பெயரும் இங்கே நிலைக்காது.
அவ்வாறே வாழ்வதை விட நாமே
முயன்றால் பெரும்புகழும் பெறலாமே!



வாழும் வழி!

Aucun commentaire:

Enregistrer un commentaire